சிங்கப்பூர் இலக்கியப் பரிசு

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்குபெறும் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள், தங்களின் இலக்கியப் படைப்புகளை உள்ளூரில் அல்லது வெளியூரில், ஒரு குறிப்பிட்டக் காலக்கட்டத்தில் வெளியிட்டுள்ளனர். இலக்கியப் படைப்புகள் சிங்கப்பூரின் 4 அதிகாரப்பூர்வ மொழிகளான ஆங்கிலம், மலாய், சீன, தமிழ் மொழிகளில் பதிப்பிக்கப்பட்டிருக்கலாம்.

சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கான சமர்ப்பிப்புகள் மூடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சமர்ப்பிப்புகள் ஜூலை மாதம் அறிவிக்கப்படும்.

华文           English           Melayu

சிங்கப்பூர் இலக்கியப் பரிசு

1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சிங்கப்பூர் இலக்கியப் பரிசு (SLP), சிங்கப்பூரிலேயே ஆக உயர்த்தரமான இலக்கிய விருதாகும். 80க்கும் அதிகமானோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் விருதைப் பெறும் சிங்கபூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள், தங்களின் இலக்கியப் படைப்புகளை உள்ளூரில் அல்லது வெளியூரில், ஒரு குறிப்பிட்டக் காலக்கட்டத்தில் வெளியிட்டுள்ளனர். இலக்கியப் படைப்புகள் சிங்கப்பூரின் 4 அதிகாரப்பூர்வ மொழிகளான ஆங்கிலம், மலாய், சீன, தமிழ் மொழிகளில் பதிப்பிக்கப்பட்டிருக்கலாம்.

ஒவ்வொரு பிரிவிலிலும் வெற்றி பெறுவோருக்குச் சிறப்புத் தொகை S$10,000 வழங்கப்படும். மேலும் வெற்றியாளர்களுக்குச் சிறப்பாக உருவாக்கப்பட்ட பதக்கங்களும் வழங்கப்படும்.

நோக்கங்கள்

பிரிவுகள்

விதிமுறைகளும் நிபந்தனைகளும் 

சமர்ப்பிப்பதற்கான வழிமுறை 

முந்தைய வெற்றியாளர்களும் இறுதிபட்டியலில் இடம்பெற்ற பங்கேற்பாளர்களும்

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

நோக்கங்கள்


மீண்டும் மேலே செல்ல

 

பிரிவுகள்

1. சிங்கப்பூரிலும் வெளிநாட்டிலும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சிங்கப்பூர் குடிமக்களாலும் நிரந்தரவாசிகளாலும் எழுதி வெளியிடப்பட்ட புதினம், கவிதை, புதினம் அல்லாதவைப் போட்டிக்கு அனுப்பப்படலாம். அவை 1/1/18- முதல் 31/12/19 வரை குறிப்பிடப்பட்ட காலத்தில் புத்தக வடிவில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

2. குழந்தைகள், பதின்வயது இளையர்கள் ஆகியவர்களுக்காக எழுதப்பட்டப்படைப்புகள், Hedwig Anuar புத்தக பரிசு போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். சிங்கப்பூர் இலக்கிய பரிசு போட்டிக்கு அல்ல.

3. 12 பிரிவுகள்:


மீண்டும் மேலே செல்ல

 

விதிமுறைகளும் நிபந்தனைகளும்

1. 31.12.2018க்குள் 18 வயது நிரம்பியச் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

2. தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு படைப்பும் அனுப்புபவரால் எழுதப்பட்ட அசல் படைப்பாக இருக்க வேண்டும்.

3. 1/1/18-க்கும் 31/12/19-க்கும் இடைப்பட்டக் காலக்கட்டத்தில் படைப்பு வெளியீடு காணப்பட்டிருக்க வேண்டும்.

4. பல படைப்பாளர்களால் எழுத்தப்பட்ட சிறுகதைகள், கவிதை, அல்லது கட்டுரைகளின் திரட்டுகள் இந்த விருதுக்குத் தகுதியற்றவையாகும்.

5. பதிப்பிக்கப்பட்ட படைப்புகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தகுதி பெற, படைப்புகள் நூல் வடிவத்தில் பதிப்பிக்கப்பட்டு வர்த்தக அடிப்படையில் வெளியிடப்படுவதற்கு தயாராக இருக்கவேண்டும். மின்-புத்தகங்கள் மற்றும் கேட்பொலி/ஆடியோ புத்தகங்கள் தற்போது விருதுக்குத் தகுதியற்றவையாகும்.

6. இந்த விருதுகள் தொடர்பில், இதற்கு முன்னர் செய்தித்தாள்கள்,சஞ்சிகைகள் அல்லது இணையத்தளங்கள் ஆகியவற்றில் வரையறுக்கப்பட்ட காலக்கட்டத்தில் (1/1/18-க்கும் 31/12/19-க்கும் இடைப்பட்டக் காலக்கட்டத்தில் படைப்பு வெளியீடு காணப்பட்டிருக்க வேண்டும் ) பதிப்பிக்கப்பட்ட சிறுகதைகள், கவிதைகள் அல்லது கட்டுரைகள் ஆகியவற்றின் நூல் வடிவிலான திரட்டுகள் தகுதி பெறுபவையாகக் கருதப்படுவதுடன் மறுபதிப்புகளாகக் கருதப்படமாட்டாது.

7. மறுபதிவுகள், முந்தைய ஆண்டுகளிலிருந்து புதுப்பிக்கப்பட்ட பதிப்புகள், மறு வெளியீடுகள் ஆகியவை போட்டிக்கு தகுதியற்றவையாகும்.

8. சிங்கப்பூர் இலக்கிய பரிசு (SLP) பெற்ற முந்திய படைப்புகள் ஒரு மொழியிலிருந்து மற்றொரு அதிகாரப்பூர்வ மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு நாங்கள் வரையறுத்துள்ள காலக்கட்டத்தில் பதிப்பிக்கப்பட்டிருந்தால் SLP 2020, போட்டிக்கு தகுதி பெறும்.

SLP 2020 விதிமுறைகளும் நிபந்தனைகளும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

சமர்ப்பிப்பதற்கான வழிமுறை 

ஒவ்வொரு விண்ணப்பத்தை சமர்பிக்கும்போது, 

அதனுடன் 4 நகல் புத்தங்கங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இணையம் வழி விண்ணப்பங்களைச் சமர்பித்தல்

சமர்ப்பிக்கப்படுவதற்கு முன் இவற்றை எல்லாம் தயார் நிலையில் வைத்துகொள்ளவும்:

இணையத்தின் வழி விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பித்தவர்களுக்கு ஒப்புகை மின்மடல் அனுபப்படும். கிடைக்கப்பெற்ற அந்த மின்மடலைப் பிரதி எடுத்து அதனுடன் சேர்த்து 4 நகழ் புத்தகங்களை அனுப்பவும்.

 

நேரடியாக சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள்

எழுதி விண்ணப்பம் செய்ய விரும்புவர்கள், முதலில் அதிகாரப்பூர்வ நுழைவு படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் அதனை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின்னர் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்துடன் யு.எஸ்.பி தரவக்கோல் கருவியில் பின்வருவனவற்றின் மென்மையான பிரதிகள், (அவற்றின் விருப்பமான வடிவங்களில்) இணைக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

  1. பூர்த்தி செய்யப்பட்ட நுழைவு படிவம் (PDF அல்லது DOC);
  2. சுறுக்கமான படைப்பாளரைப்பற்றி தன்விவரங்கள் (PDF அல்லது DOC) 100 சொற்களுக்கு மேற்போகாமல் ஆங்கிலத்தில் எழுத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் தாய்மொழியில் மொழிபெயர்ப்பு செய்து அனுப்புக);
  3. புகைப்படம் ஒன்று (JPG; குறைந்தது 300dpi at 1MB- தெளிவான படமாக இருக்க வேண்டும்,; கைகளில் எந்த பொருளும் இல்லாமல் வெள்ளை அல்லது நிறமற்ற பின்னணியில் படைப்பாளரின் புகைப்படம் இருக்க வேண்டும்.);
  4. புத்தகத்தின் அட்டைப்படம் (JPG அல்லது PDF; குறைந்தது 300dpi at 1MB);
  5. புத்தகத்தைப்பற்றிய சிறு விளக்கம் (PDF அல்லது DOC) 150 சொற்களுக்கு மேற்போகாமல், ஆங்கிலத்திலும் தாய்மொழியிலும் அனுப்பவும்;
  6. மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளுக்கு மட்டும்: மேலே குறிப்பிட்ட விவரங்களுடன் இவற்றையும் சேர்த்துகொள்ளவும்: மொழிபெயர்ப்பாளர் பற்றிய சுறுக்கமான குறிப்பு (100 சொற்களுக்கு மேற்போகாமல் ஆங்கிலத்திலும் தாய்மொழியிலும் அனுப்பவும்); புகைப்படம் ஒன்று (JPG; குறைந்தது 300dpi at 1MB- தெளிவான படமாக இருக்க வேண்டும்,; கைகளில் எந்த பொருளும் இல்லாமல் வெள்ளை அல்லது நிறமற்ற பின்னணியில் மொழிபெயர்ப்பாளரின் புகைப்படம் இருக்க வேண்டும்.);
  7. ஒவ்வொரு விண்ணப்பத்துடன் பதிப்பிக்கப்பட்ட 4 நகல் புத்தகங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும். நாங்கள் நிர்ணயித்துள்ள இறுதி தேதி/ நேரத்திற்குள் அனைத்தும் சிங்கப்பூர் புத்தக மன்றத்திற்கு வந்து சேர வேண்டும். படிவங்களுடன் நகல் புத்தகங்களும் இணைந்து அனுப்பபட வேண்டும். அப்படி சமர்ப்பிக்கப்படாவிட்டால் விருதுக்கு தகுதி பெறுவதை இழக்க நேரிடும்.

எல்லா விண்ணப்பங்களையும் தபால் முறையிலோ அல்லது நேரடியாகவோ இங்கே அனுப்பவும்:

Singapore Book Council
Goodman Arts Centre Blk E #03-32
90 Goodman Road Singapore 439053
ATTN: SLP 2020

 

மேல் விவரங்களுக்கு, மின்மடல் அனுப்பவும்: [email protected].

------------------------------------------

முந்தைய வெற்றியாளர்களும் இறுதிபட்டியலில் இடம்பெற்ற பங்கேற்பாளர்களும்


மீண்டும் மேலே செல்ல

Downloads

Final_Tamil_SLP2020_FAQ (218KB pdf)
Final_Tamil_SLP2020_Rules (266KB pdf)
Final_Tamil_SLP2020_Entry Form (316KB pdf)